இனி வரும் இனிய வரிகள்
இறுதி வரைக்கும் நான் இறங்க வில்லை. இருந்தும் அவள் விழிகளோடு
பயணம் செய்தேன்.
" விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்" என்று வரிகளையும் இரசித்துக் கொண்டு...
குழப்பம் வேண்டாம் கூறி விடுகிறேன்.
அந்த நிறுத்தத்தில் அவள் பேருந்தில் ஏறினாள். நடத்துனர் இருக்கைக்கு எதிரே அவள் அமரப்போகும் வேளையில் 'இன்றும் உன் இடத்தை பிடித்து விட்டாயா' என்று நடத்துனர் நகைத்தார்.
அப்பொழுது தான் விளங்கியது, அவள் தினம் வரும் பேருந்து இது என்றும், நேற்று அவள் ஏறியதை நான் கவனிக்கவில்லை என்றும்.
எங்கே நேற்று நடந்த சம்பவத்தில் யாரிடமாவது வசவு வாங்கி விடுவோமோ என்ற பயத்தில் மீண்டும் பேருந்தில் ஏறியதும், என் நிறுத்தத்தில் இறங்கியதும் மட்டும் என் நினைவில்.
எப்படியோ,
இனி தினமும் பயணம் தான் அவள் விழிகளோடும், அழகான வரிகளோடும்...
- தொடரும்.
கௌசல்யா ஜெகதீசன்
Tags: #TamilStory #TamilStories #தமிழ்கதைகள் #Mrjk #RomanticStory #RomanticStories #TamilloveStory #Tamillovestories #Story #Stories
Keywords: Short Romantic stories And Short romantic love stories and short romantic bedtime stories and romantic story and romantic love story reading and love stories to read and romantic short stories online