அந்த வரிகளும் அவள் விழிகளும்
ஒரு நண்பராக இந்த கதையில் நான் பயணிக்கும் இடமெங்கும் தங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.தவறாமல் வர வேண்டும்.
அரை மணி நேரம் தாமதமாக வந்த அந்த பேருந்தில் பரபரப்பாக ஏறி இருக்கையின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தேன். வேலைக்கு சேர்ந்த முதல் நாளே காலம் தவறி செல்கிறாயே என்று என்னை வசவிக்கொண்டேன். இறங்கும் இடத்தையும் தவரக்கூடாதென்று அந்த ஜன்னலின் வழியே பார்த்துக்கொண்டே பயணித்தேன்...
வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது.துடிப்பாக அங்கும் இங்கும் அலைந்தோடிய என் கருவிழிகள் சட்டென்று நின்றது அவள் விழிகள் பார்த்து...
பேருந்து ஏறியது முதல் பாடிகொண்டிருந்த பாடல்கள் எதையும் கவனிக்காத என் காதுகள்
அவள் விழிகள் பார்த்த அந்த நொடி " ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே " என்ற (நிலவே வா பாடல்) வரியை என் இதயத்திற்கு அனுப்பிவிட்டது.
வாலி அவர்களின் வரியும், இளையராஜா அவர்களின் இசையும், பாலசுப்பிரமணியம் அவர்களின் குரலும், அவள் விழியும்...
விவரிக்க முடியாத இந்த உணர்வை மௌனமாக முடிக்கிறேன்.
- தொடரும்.
கௌசல்யா ஜெகதீசன்.
Tags: #TamilStory #TamilStories #தமிழ்கதைகள் #Mrjk #RomanticStory #RomanticStories #TamilloveStory #Tamillovestories #Story #Stories
Keywords: Short Romantic stories And Short romantic love stories and short romantic bedtime stories and romantic story and romantic love story reading and love stories to read and romantic short stories online
It seems like I'm in that position 💙
ReplyDeleteவாழ்க்கையில் வரும் முதல் காதல் போல அந்த அனுபவம்
Deleteஎன்றும் மறக்க முடியாத நினைவது
Nice
ReplyDeleteநன்றி
Deleteஅருமையாக உள்ளது..👏👏 வார்த்தைகளைப் பயன்படுத்திய விதம் அழகாக இருந்தது..
ReplyDeleteமிக்க நன்றி
Delete