விதியும் நானும்
நான் பார்ப்பதை உணர்ந்து கொண்ட அவள் அடுத்தடுத்து பேருந்தில் ஏறும் பொழுதெல்லாம் என்னை பரிசீலித்து கொண்டாள்.
அவள் நிறுத்தம் வரும் வரை அடங்காமல் ஓடும் என் கருவிழிகள் அவளைக் கண்டதும் சில நொடிகள் திரும்பி விடுகின்றன அவள் என்னை இரசிக்கட்டும் என.
இப்படியே பேருந்தில் சென்று கொண்டிருந்த எங்களது விழிப்பயணதில் இருந்து நான் இறங்க வேண்டிய தருணம் வந்தது நான் வேலை செய்யும் இடம் மாற்றப்பட்டது காரணமாக.
வேலையை விடுத்து அவள் வழி செல்லும் அளவிற்கு என்னிலமையும் இல்லை.
வழி மாறிப்போகும் பயணத்தில் அவள் விழி காணாமல் ஏதோ வெறுமை என்னோடு.இனி அவள் விழிகளை எப்பொழுது பார்ப்பேன் என்ற என் உயிரின் தவிப்பு எந்த நிறுத்தத்திலும் நிற்கவில்லை.
வழி மாறிப்போகும் புதிய பேருந்தில் அவள் வரப்போவதில்லை என்று அறிந்தும் அவள் விழிகளை தேடினேன் "என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான் ,
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான் " என்ற வரிகளோடு .
அந்த விழிகள் காணாமல் நான் என்ன செய்வேன் என்று எனக்கு தேர்வு வைத்த விதி இறங்கி வந்து
முழு மதிப்பெண் கொடுத்த நாள் அது.
ஆம் மீண்டும் அவளை நான் பார்த்த நாள் அது.
நான் வேலை செய்யும் அதே அலுவலகத்தில் அவளும் சேர்ந்திருந்தாள். அப்படியே சிலையென அசைவற்று நான்.இறைவன் சோதனை செய்வானே தவிர கை விடமாட்டான் என்ற என் அன்னையின் வாக்கு அன்று உறுதியானது.
கௌசல்யா ஜெகதீசன்
Tags: #TamilStory #TamilStories #தமிழ்கதைகள் #Mrjk #RomanticStory #RomanticStories #TamilloveStory #Tamillovestories #Story #Stories
Keywords: Short Romantic stories And Short romantic love stories and short romantic bedtime stories and romantic story and romantic love story reading and love stories to read and romantic short stories online
❤️👏 That was a nice one 😍
ReplyDeleteமிக்க நன்றி
DeleteTwistu👏👏😀
ReplyDeleteஆம். என் வாழ்க்கையின் ஆகச் சிறந்த திருப்பம் இது .
Delete