எனை தீண்டிய வரிகளும் , அவள் விரல்களும்
அவள் விழிகள் தரும் மாயத்தில் இருந்து எனை மீட்க தவித்துக் கொண்டிருந்த நேரம் அதில் அந்த விழிகள் என் அருகே நெருங்கியது .
அந்த தருணம் எங்கிருந்தோ வந்த "எனை தீண்டி விட்டாய் உயிர் தூண்டி விட்டாய் " என்ற வரிகள் எனை அந்த பிரம்மையில் இருந்து மீட்டுக் கொடுத்தது..
தெளிந்து பார்க்கையில் அவள் விரல்கள் என்னை தொட்டு யாரென்று கேட்டுக் கொண்டிருந்த நொடியில் தான் புரிந்தது எனையும் மறந்து அவள் அருகில் நான் நின்றேன்...
இன்றும் புரியாத புதிராய் அந்த தருணம்.
சரியான சமயத்தில் குரல் தந்து உதவி செய்த சின்மயி மற்றும் பிரசன்னா ராவ் அவர்களுக்கும், வரிகள் எழுதிய தாமரை அவர்களுக்கும், இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவா அவர்களுக்கும் என்னுடைய நன்றிகள் பல
தாங்கள் உதவி செய்யாது இருந்திருந்தால் என்னிலமை இன்றும் நினைத்தால் இதயம் பயத்தில் வேகமாக துடித்துக் கொள்கிறது ...
இருந்தும் அந்த வரிகளும் அவள் தீண்டிய நொடிகளும்...
இருந்தும் அந்த வரிகளும் அவள் தீண்டிய நொடிகளும்...
- தொடரும்.
கௌசல்யா ஜெகதீசன்
Tags: #TamilStory #TamilStories #தமிழ்கதைகள் #Mrjk #RomanticStory #RomanticStories #TamilloveStory #Tamillovestories #Story #Stories
Keywords: Short Romantic stories And Short romantic love stories and short romantic bedtime stories and romantic story and romantic love story reading and love stories to read and romantic short stories online
You are getting into the next step dear.. Keep going..!!! 👏👏🤩
ReplyDeleteஎன் முயற்சியை ஊக்கப்படுத்தும் தங்களுக்கு நன்றிகள் பல
Delete