இதய அறையில் இமைக்காத ஓவியம்
தினம் என் நிறுத்தத்தில் ஏறி நான் இறங்கும் வரை வரிகளையும் அவள் விழிகளையும் ரசித்து பயணம் செய்வேன்.
நான் கள்ளதனமாய் ரசிப்பதை இறைவன் காட்டிக் கொடுக்க முடிவு செய்துவிட்ட நாள் அது.
அன்று என் இருக்கைக்கு அடுத்து அமர்ந்து இருந்த ஒருவரிடம் நடத்துனர் வாக்கு வாதம் செய்து கொண்டிருந்தார்.
நான் கவனிக்கவில்லை.
எனக்கு எப்போதும் அந்த விழிகளில் மட்டுமே கவனம்.
வாக்குவாதத்தின் சத்தம் சற்று அதிகம் ஆனதும் அவள் விழிகள் என் இருக்கை பக்கம் திரும்பி என்னை நோக்கின.
அன்று அந்த நொடி அவள் என் விழிகளை இமைக்காமல் கண்ட நொடி என்னை சுற்றிய நிகழ்வுகள் அனைத்தும் அப்படியே நின்றது.
ஆனால் ஒரு குரல் மட்டும் அசரிரி போல் " கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது" என்ற வரிகளை இசைத்து கொண்டிருந்தது.
ஏன்? அவள் என்னை நோக்கும் அந்த நொடி மட்டும் உடல் இல்லா உயிர் ஒன்றை உணர்கிறேன்.
அவள் விழி வடிக்கும் போதும் மட்டும் காந்தத் துகள்களை அதிகம் சேர்த்து இருப்பான் போல இந்த இறைவன்.
இப்படியே புகழ்ந்து கொண்டிருந்தால் இந்த கதையை என் மறு ஜென்மத்தில் தான் முடிப்பேன்.
நிகழ்வுக்கு வருவோம்.
அந்த வாக்குவாதம் என்ன ஆனது என்று அறியவில்லை.ஆனால் நான் அவளை கள்ளத்தனமாய் பார்ப்பதை அவள் தெரிந்து கொண்டது போல் உணர்ந்தேன்.
அவளை பார்க்க வைத்ததற்கு நன்றி சொல்வதா இல்லை என்னை அவளிடம் காட்டிக் கொடுத்ததற்கு கோபம் கொள்வதா அந்த நடத்துனர் மேல்.
இருந்தும் அவள் இமைக்காமல் கண்ட அந்த நொடிகள் இன்றும் என் இதய அறையில் ஒரு ஓவியமாய்...
- தொடரும்.கௌசல்யா ஜெகதீசன்
Tags: #TamilStory #TamilStories #தமிழ்கதைகள் #Mrjk #RomanticStory #RomanticStories #TamilloveStory #Tamillovestories #Story #Stories
Keywords: Short Romantic stories And Short romantic love stories and short romantic bedtime stories and romantic story and romantic love story reading and love stories to read and romantic short stories online
பாடல் வரிகளை கதையாக்கும் தங்களின் கற்பனை சிறப்பு.👏👏 தொடர்ந்து பயணிக்க எழுத்தாளருக்கு தோழியின் வாழ்த்துக்கள்.!!😍😀
ReplyDeleteதமிழிலேயே வாழ்த்துக்கள் தெரிவிக்கும் தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பல தோழியே.
Delete